அல்-முக்தஸர்
تِلْكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهَآ إِلَيْكَ ۖ مَا كُنتَ تَعْلَمُهَآ أَنتَ وَلَا قَوْمُكَ مِن قَبْلِ هَـٰذَا ۖ فَٱصْبِرْ ۖ إِنَّ ٱلْعَـٰقِبَةَ لِلْمُتَّقِينَ ﴿٤٩﴾
நூஹின் இந்த சம்பவம் மறைவான செய்திகளில் உள்ளவையாகும். தூதரே! நீரும் உம் சமூகமும் நாம் உமக்கு அறிவித்த இந்த வஹிக்கு முன்னர் இதனை அறிந்திருக்கவில்லை. நூஹ் பொறுமை செய்தது போல் நீரும் உம் சமூகத்தினரின் தொல்லைகளையும் நிராகரிப்பையும் பொறுத்துக் கொள்வீராக. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பவர்களுக்கே வெற்றி நிச்சயம்.