×

هود

வசனம் 38

அல்-முக்தஸர்

وَيَصْنَعُ ٱلْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِۦ سَخِرُوا۟ مِنْهُ ۚ قَالَ إِن تَسْخَرُوا۟ مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ ﴿٣٨﴾

நூஹ் தம் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தினார். கப்பல் கட்ட ஆரம்பித்தார். அவருடைய சமூகத்தின் தலைவர்களும் பெரியவர்களும் - தண்ணீரோ ஆறுகளோ இல்லாத நிலத்தில் கப்பலை செய்து கொண்டிருந்ததற்காக - அவரைக் கடந்து செல்லும் போதெல்லாம் பரிகாசம் செய்தார்கள். அவர்கள் திரும்பத் திரும்ப பரிகாசம் செய்த போது நூஹ் கூறினார்: -“செல்வாக்கு உடையவர்களே!- இன்று நாங்கள் கப்பலைச் செய்யும் போது நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்தால் நீங்கள் மூழ்கப் போவதை நீங்கள் அறியாமலிருப்பதை எண்ணி நாங்களும் பரிகாசம் செய்வோம்.