×

هود

வசனம் 34

அல்-முக்தஸர்

وَلَا يَنفَعُكُمْ نُصْحِىٓ إِنْ أَرَدتُّ أَنْ أَنصَحَ لَكُمْ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغْوِيَكُمْ ۚ هُوَ رَبُّكُمْ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٣٤﴾

நேரான பாதையை விட்டு அல்லாஹ் உங்களை வழிகெடுக்க நாடினால், உங்களின் பிடிவாதத்தின் காரணமாக அவன் நேர்வழியை விட்டும் உங்களைக் கைவிட விரும்பினால் என் அறிவுரையும் நினைவூட்டலும் உங்களுக்குப் பயனளிக்காது. அவனே உங்களின் இறைவன். உங்களின் விவகாரங்களுக்கு அவனே அதிபதியாவான். எனவே அவன் நாடினால் உங்களை வழிதவறச் செய்து விடுவான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.