×

هود

வசனம் 31

அல்-முக்தஸர்

وَلَآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ إِنِّى مَلَكٌ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِىٓ أَعْيُنُكُمْ لَن يُؤْتِيَهُمُ ٱللَّهُ خَيْرًا ۖ ٱللَّهُ أَعْلَمُ بِمَا فِىٓ أَنفُسِهِمْ ۖ إِنِّىٓ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ ﴿٣١﴾

என் சமூகமே!- நீங்கள் நம்பிக்கை கொண்டால் உங்களுக்கு செலவு செய்யத்தக்க அல்லாஹ்வின் ரிஸ்க் உள்ள அவனது கருவூலங்கள் என்னிடம் உள்ளது என்றும், நான் மறைவானவற்றை அறிவேன் என்றும் நான் ஒரு வானவர் என்றும் நான் உங்களிடம் கூறமாட்டேன். மாறாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் இழிவாகக் கருதும் ஏழைகளுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்களின் எண்ணங்களையும், நிலைகளையும் அல்லாஹ் நன்கறிந்தவன். நான் இவையனைத்தும் என்னிடம் இருப்பதாக வாதிட்டால் தண்டனைக்குரிய அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்.