×

هود

வசனம் 3

அல்-முக்தஸர்

وَأَنِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَـٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِى فَضْلٍ فَضْلَهُۥ ۖ وَإِن تَوَلَّوْا۟ فَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ ﴿٣﴾

மக்களே!- உங்கள் இறைவனிடம் உங்கள் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருங்கள். அவன் விடயத்தில் நீங்கள் செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு அவன் பக்கம் திரும்புங்கள். இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணைகள் வரை அவன் உங்களை நல்ல முறையில் அனுபவிக்கச் செய்வான். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரிந்த ஒவ்வொருவருக்கும் அவன் குறைவின்றி நிறைவாக தன் அருளை வழங்கிடுவான். நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததன் மீது நம்பிக்கை கொள்ளாமல் நீங்கள் புறக்கணித்தால் உங்கள் மீது பயங்கரமான நாளான மறுமை நாளின் வேதனையைக் குறித்து அஞ்சுகிறேன்.