அல்-முக்தஸர்
فَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا نَرَىٰكَ إِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرَىٰكَ ٱتَّبَعَكَ إِلَّا ٱلَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِىَ ٱلرَّأْىِ وَمَا نَرَىٰ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍۭ بَلْ نَظُنُّكُمْ كَـٰذِبِينَ ﴿٢٧﴾
அவருடைய சமூகத்தின் நிராகரித்த தலைவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உமது அழைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களை விட உமக்கு எந்த சிறப்பும் இல்லை. ஏனெனில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தாம். மேலும் எமது பார்வையில் இழிவானவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். நாங்கள் உம்மைப் பின்பற்றுவதற்கு பணத்திலோ பதவியிலோ கண்ணியத்திலோ எவ்வித மேலதிக சிறப்பும் உங்களுக்கு இல்லை. மாறாக உங்களது கூற்றில் நீங்கள் பொய்யர்களே என நாங்கள் கருதுகிறோம்.”