×

هود

வசனம் 18

அல்-முக்தஸர்

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا ۚ أُو۟لَـٰٓئِكَ يُعْرَضُونَ عَلَىٰ رَبِّهِمْ وَيَقُولُ ٱلْأَشْهَـٰدُ هَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَىٰ رَبِّهِمْ ۚ أَلَا لَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّـٰلِمِينَ ﴿١٨﴾

அல்லாஹ்வுக்கு இணை உண்டு, அல்லது மகன் உண்டு என்று இட்டுக்கட்டிக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டுபவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனுக்கு முன்னால் அவர்களின் செயல்களைக் குறித்து விசாரிக்கப்படுவதற்காக நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக வானவர்களும் தூதர்களும் “இவர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி அவனுக்கு இணை உண்டு, மகன் உண்டு என்று கூறினார்கள் என்று.” சாட்சி கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய்கூறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும்.”