×

هود

வசனம் 123

அல்-முக்தஸர்

وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ ٱلْأَمْرُ كُلُّهُۥ فَٱعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ ۚ وَمَا رَبُّكَ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿١٢٣﴾

வானங்களிலும் பூமியிலும் மறைவாக இருப்பவற்றின் அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறைவதில்லை. மறுமை நாளில் அவன் பக்கமே அனைத்து விவகாரங்களும் திரும்பும். எனவே -தூதரே!- அவனை மட்டுமே வணங்குவீராக. உமது எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருப்பீராக. நீங்கள் செய்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் கூலி வழங்குவான்.