அல்-முக்தஸர்
فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوحَىٰٓ إِلَيْكَ وَضَآئِقٌۢ بِهِۦ صَدْرُكَ أَن يَقُولُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَآءَ مَعَهُۥ مَلَكٌ ۚ إِنَّمَآ أَنتَ نَذِيرٌ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ وَكِيلٌ ﴿١٢﴾
தூதரே! -அவர்களின் நிராகரிப்பு, பிடிவாதம், சான்றுகளைக் கோருதல் ஆகியவற்றை நீர் எதிர்கொள்வதனால்- அல்லாஹ் உமக்கு அவர்களிடம் எடுத்துரைக்கும்படி கட்டளையிட்டவற்றில் அவர்களுக்குச் செய்வது சிரமமான சிலவற்றை நீர் எடுத்துரைக்காமல் விட்டு விடுவீர் போலும்; “இவர் மீது இவரைச் செல்வந்தராக்கும் ஒரு பொக்கிஷம் இறக்கப்படக் கூடாதா” அல்லது “இவருடன் இவரை உண்மைப்படுத்தும் வானவர் ஒருவர் வந்திருக்கக் கூடாதா” என்று அவர்கள் கூறாமல் இருப்பதற்காக அதனை எடுத்துரைப்பதன் மூலம் உமது உள்ளம் இறுகி விடும் போலும். இதன் காரணமாக உமக்கு அறிவிக்கப்பட்ட எதையும் விட்டு விடாதீர். உமக்கு அல்லாஹ் எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை எடுத்துரைத்து எச்சரிக்கை செய்பவர் மட்டுமே. அவர்கள் கேட்கும் சான்றுகளைக் கொண்டு வருவது உமது பணியல்ல. அல்லாஹ் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.