×

هود

வசனம் 119

அல்-முக்தஸர்

إِلَّا مَن رَّحِمَ رَبُّكَ ۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمْ ۗ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ ﴿١١٩﴾

ஆயினும் நேர்வழியை அடைவதற்கு உம் இறைவன் கருணை காட்டியோரைத் தவிர. அவர்கள் அவனை ஒருமைப்படுத்துவதில் முரண்பட மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளைக் கொண்ட இந்த சோதனைக்காகவே அவன் அவர்களைப் படைத்துள்ளான். அவர்களில் துர்பாக்கியசாலிகளும், பாக்கியசாலிகளும் இருக்கிறார்கள். -தூதரே!- மனித, ஜின் இனத்தில் ஷைத்தான்களைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன் என்று உம் இறைவன் ஆரம்பத்திலே விதித்த அவனுடைய வார்த்தை நிறைவேறி விட்டது.