×

هود

வசனம் 1

அல்-முக்தஸர்

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ الٓر ۚ كِتَـٰبٌ أُحْكِمَتْ ءَايَـٰتُهُۥ ثُمَّ فُصِّلَتْ مِن لَّدُنْ حَكِيمٍ خَبِيرٍ ﴿١﴾

(الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அல்குர்ஆன் வார்த்தையும் பொருளும் திறமையாக வடிவமைக்கபட்ட வசனங்களையுடைய ஒரு வேதமாகும். அதில் எவ்வித குறைபாட்டையும் நீர் காணமுடியாது. பின்னர் அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதவை, ஏவல், விலக்கல், வாக்குறுதி, எச்சரிக்கை, சம்பவங்கள் ஏனையவை ஆகியன, தனது திட்டமிடலிலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்க, அடியார்களின் நிலமைகளையும் அவர்களுக்கு பலனளிப்பவற்றையும் குறித்து நன்கறிந்த (இறை)வனால் எடுத்துரைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.