×

يونس

வசனம் 93

அல்-முக்தஸர்

وَلَقَدْ بَوَّأْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَـٰهُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ فَمَا ٱخْتَلَفُوا۟ حَتَّىٰ جَآءَهُمُ ٱلْعِلْمُ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ ﴿٩٣﴾

நாம் இஸ்ராயீலின் மக்களை அருள்வளம்மிக்க ஷாம் தேசத்திலுள்ள சிறந்த, விரும்பத்தக்க ஓர் இடத்தில், இறங்கச் செய்தோம். அவர்களுக்குத் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட பொருள்களை வழங்கினோம். தவ்ராத்தில் அவர்கள் படித்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணணையை உண்மைப்படுத்தக்கூடியதாக அல்குர்ஆன் அவர்களிடம் வரும் வரை அவர்கள் தமது மார்க்க விடயத்தில் முரண்படவில்லை. அவர்கள் அதனை நிராகரித்த போது அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் முரண்பட்டுள்ளவற்றில் மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் சத்தியத்தில் இருந்தவர்களுக்கும் அசத்தியத்தில் இருந்தவர்களுக்கும் தகுந்த கூலியை அவன் வழங்குவான்.