அல்-முக்தஸர்
وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُۥ زِينَةً وَأَمْوَٰلًا فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا۟ عَن سَبِيلِكَ ۖ رَبَّنَا ٱطْمِسْ عَلَىٰٓ أَمْوَٰلِهِمْ وَٱشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا۟ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ ﴿٨٨﴾
மூஸா கூறினார்: “எங்கள் இறைவா! இவ்வுலக வாழ்வில் நீ பிர்அவ்னுக்கும் அவனுடைய சமூகத்தின் தலைவர்களுக்கும் உலகத்தின் அலங்காரங்களையும் இந்த உலக வாழ்கையில் செல்வங்களையும் வழங்கியுள்ளாய். நீ அவர்களுக்கு அளித்தவற்றிற்காக அவர்கள் உனக்கு நன்றி செலுத்தவில்லை. மாறாக அவற்றைக் கொண்டு மக்களை உன் வழியை விட்டும் நெறிபிறழச் செய்தார்கள். எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை நீ அழித்து விடுவாயாக. அவர்களின் உள்ளங்களை கடினமாக்கி விடுவாயாக. எனெனில் அவர்கள் நம்பிக்கை கொள்வது பயனளிக்காத, வேதனை மிக்க தண்டனையை அவர்கள் காணும் நேரம் அன்றி அவர்கள் நம்பிக்கைகொள்ளமாட்டார்கள்.