×

يونس

வசனம் 64

அல்-முக்தஸர்

لَهُمُ ٱلْبُشْرَىٰ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْـَٔاخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَـٰتِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿٦٤﴾

அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் நல்ல கனவின் மூலம், மக்கள் அவர்களைப் புகழ்வதன் மூலம் நற்செய்தி உண்டு; அவர்களின் உயிர்களைக் கைப்பற்றப்படும் போதும், மரணித்த பின்னரும், ஒன்று திரட்டப்படும் போதும் வானவர்களிடமிருந்து அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வெகுமதியே மாபெரும் வெற்றியாகும். ஏனெனில் அதில்தான் எதிர்பார்த்தது கிடைத்து அச்சப்பட்டதில் இருந்து பாதுகாப்பு உண்டு.