அல்-முக்தஸர்
وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ ﴿٦٠﴾
பொய்யை புனைபவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு என்ன நிகழும் என்று எண்ணுகிறார்கள்? அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று எண்ணுகிறார்களா? சாத்தியமேயில்லை. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் அவர்களுக்கு அவகாசம் அளித்து அவர்கள் மீது அருள்புரியக் கூடியவனாவான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.