×

يونس

வசனம் 57

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى ٱلصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ﴿٥٧﴾

மனிதர்களே! உங்களிடம் குர்ஆன் வந்துள்ளது. அதில் அறிவுரையும் ஆர்வமூட்டலும் அச்சமூட்டலும் அடங்கியுள்ளது. அது உள்ளங்களிலுள்ள சந்தேகம் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக இருக்கின்றது; சத்தியப் பாதையின் பக்கம் வழிகாட்டுகிறது. அது நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் இதைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.