×

يونس

வசனம் 49

அல்-முக்தஸர்

قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۚ إِذَا جَآءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَـْٔخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ ﴿٤٩﴾

தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “எனக்கு நானே தீங்கிழைக்கவோ அதனைத் தடுக்கவோ சக்திபெற மாட்டேன் எனும் போது எவ்வாறு மற்றவர்களுக்கு என்னால் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியும்? ஆயினும் அல்லாஹ் நாடியதைத் தவிர. நான் எவ்வாறு அவன் மறைவாக வைத்திருக்கும் விஷயங்களை அறிய முடியும்? அல்லாஹ் அழிப்பதாக எச்சரித்த ஒவ்வொரு சமூகத்திற்கும் அழிவதற்கான குறிப்பிட்ட நேரம் உண்டு. அதனை அல்லாஹ் மட்டுமே அறிவான். அழியும் நேரம் வந்துவிட்டால் அது சிறிது நேரம் கூட முந்தவோ பிந்தவோ செய்யாது.