அல்-முக்தஸர்
وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُوٓا۟ إِلَّا سَاعَةً مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ ۚ قَدْ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ ﴿٤٥﴾
மனிதர்களை விசாரணை செய்வதற்காக அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் மறுமை நாளில் இந்த உலக வாழ்விலும் மண்ணறை வாழ்விலும் பகலின் சில பொழுதே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். பின்னர் மறுமை நாளில் பயங்கரமான காட்சிகளைக் கண்டதனால் அவர்களது அறிமுகம் அறுபட்டுப் போகும். மறுமை நாளில் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரித்தவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள். அவர்கள் இழப்பிலிருந்து தப்பிப்பதற்கு உலக வாழ்வில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் நாளை நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை.