×

يونس

வசனம் 39

அல்-முக்தஸர்

بَلْ كَذَّبُوا۟ بِمَا لَمْ يُحِيطُوا۟ بِعِلْمِهِۦ وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيلُهُۥ ۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلظَّـٰلِمِينَ ﴿٣٩﴾

அவர்கள் பதிலளிக்கவில்லை. மாறாக இந்த குர்ஆனை புரிந்து, சிந்திப்பதற்கு முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை நிகழ்வதற்கு முன்னர் விரைந்து அவர்கள் அதனை மறுத்து விட்டார்கள். அது வருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இதுபோன்றே முந்தைய சமூகத்தினரும் நிராகரித்தார்கள். வேதனை அவர்கள் மீது இறங்கியது. -தூதரே!- பொய்ப்பித்த சமூகங்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான்.