×

يونس

வசனம் 37

அல்-முக்தஸர்

وَمَا كَانَ هَـٰذَا ٱلْقُرْءَانُ أَن يُفْتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَـٰكِن تَصْدِيقَ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ ٱلْكِتَـٰبِ لَا رَيْبَ فِيهِ مِن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ ﴿٣٧﴾

இந்த அற்புதமான குர்ஆன் புனைந்துரைக்கப்படவோ அல்லாஹ்வைத் தவிர உள்ள யாருக்கும் சேர்க்கப்படவோ முடியாது. ஏனெனில் அது போன்ற ஒன்றை மனிதர்களால் கொண்டுவரவே முடியாது. ஆயினும் இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவற்றில் சுருக்கமாக கூறப்பட்ட சட்டதிட்டங்களை சிறந்த முறையில் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. எனவே அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறங்கியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.