×

يونس

வசனம் 24

அல்-முக்தஸர்

إِنَّمَا مَثَلُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَـٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ مِمَّا يَأْكُلُ ٱلنَّاسُ وَٱلْأَنْعَـٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلْأَرْضُ زُخْرُفَهَا وَٱزَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَآ أَنَّهُمْ قَـٰدِرُونَ عَلَيْهَآ أَتَىٰهَآ أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَـٰهَا حَصِيدًا كَأَن لَّمْ تَغْنَ بِٱلْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ ﴿٢٤﴾

நீங்கள் அனுபவிக்கக்கூடிய இவ்வுலக வாழ்க்கை விரைவாக அழிந்துவிடுவதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதன் மூலம் மனிதர்கள் உண்ணும் தானியங்கள், பழங்கள், விலங்குகள் உண்ணும் புற்பூண்டுகள் போன்ற பல்வேறு விதமான தாவரங்கள் செழித்து வளர்கின்றன. பூமி தன் அழகிய நிறத்தைப் பெற்று மழையின் மூலம் விளையும் பல்வேறு தாவரங்களின் மூலம் பொலிவுற்று, அவற்றின் உரிமையாளர்கள் அவற்றின் விளைச்சல்களை அறுவடைசெய்ய முடியும் என எண்ணிக்கொண்டிருக்கும் போது அவை அழிய வேண்டும் என்ற நம்முடைய விதி அவற்றுக்கு ஏற்படுகிறது. எனவே அண்மையில் தாவரங்களாலும், மரங்களாலும் செழிப்புற்று காணப்படாதது போன்று அறுவடை செய்யப்பட்டதாக அவற்றை ஆக்கி விடுகின்றோம். இவ்வுலகத்தின் நிலையையும் விரைவாக அது அழிந்துவிடுவதையும் நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியது போன்றே சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, படிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கு நாம் ஆதாரங்களையும் சான்றுகளையும் தெளிவுபடுத்துகிறோம்.