அல்-முக்தஸர்
هُوَ ٱلَّذِى يُسَيِّرُكُمْ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۖ حَتَّىٰٓ إِذَا كُنتُمْ فِى ٱلْفُلْكِ وَجَرَيْنَ بِهِم بِرِيحٍ طَيِّبَةٍ وَفَرِحُوا۟ بِهَا جَآءَتْهَا رِيحٌ عَاصِفٌ وَجَآءَهُمُ ٱلْمَوْجُ مِن كُلِّ مَكَانٍ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ ۙ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنْ أَنجَيْتَنَا مِنْ هَـٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّـٰكِرِينَ ﴿٢٢﴾
மனிதர்களே!- அவனே நிலத்தில் உங்கள் பாதங்களாலும் வாகனங்களிலும் உங்களை நகரச் செய்கிறான். அவனே கடலில் கப்பல்களில் உங்களை பயணிக்கச் செய்கிறான். நீங்கள் கடலில் கப்பல்களில் இருக்கும் போது சாதகமான காற்று வீசினால் அக்காற்றினால் பயணிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் அவ்வாறு சந்தோசத்தில் திளைத்திருக்கும் போது திடீரென்று புயல் காற்று வீசி, நாலாபுறமும் கடலலைகள் அவர்களைச் சூழ்ந்து, தாம் பெரும்பாலும் அழிந்து விடுவோம் என்று அவர்கள் எண்ணும் போது அல்லாஹ்வை மட்டுமே அழைத்து, அவனுக்கு வேறு எதையும் இணையாக்காது கூறுவார்கள்: “இறைவா, அழிவை ஏற்படுத்தும் இந்த சோதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நீ எங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்காக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராக ஆகிவிடுவோம்”.