×

يونس

வசனம் 18

அல்-முக்தஸர்

وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَـٰٓؤُلَآءِ شُفَعَـٰٓؤُنَا عِندَ ٱللَّهِ ۚ قُلْ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ ﴿١٨﴾

இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்களுக்கு பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியாத கற்பனைக் கடவுள்களை வணங்குகிறார்கள். வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவனால் மட்டுமே தான் நாடிய போது பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியும். அவர்கள் தங்களின் தெய்வங்களைக் குறித்துக் கூறுகிறார்கள்: “இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக பரிந்துரை செய்யும் தரகர்களாகும். அதனால் அவன் எங்களின் பாவங்களினால் எங்களைத் தண்டிக்கமாட்டான். -”தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “வானங்களிலும் பூமியிலும் அவன் அறியாத ஒரு இணை உண்டு என்பதை அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்களா ? இணைவைப்பாளர்கள் கூறும் பொய்களையும், அசத்தியத்தையும் விட்டு அவன் பரிசுத்தமானவன்.