×

يونس

வசனம் 101

அல்-முக்தஸர்

قُلِ ٱنظُرُوا۟ مَاذَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَا تُغْنِى ٱلْـَٔايَـٰتُ وَٱلنُّذُرُ عَن قَوْمٍ لَّا يُؤْمِنُونَ ﴿١٠١﴾

தூதரே!- உம்மிடம் சான்றுகளை வேண்டும் இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் என்னென்ன இருக்கின்றன என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நிராகரிப்பில் நிலைத்திருந்து நம்பிக்கை கொள்வதற்கு தயாரற்ற சமூகத்திற்கு அத்தாட்சிகளையும் சான்றுகளையும் இறக்குவதும், தூதர்களை அனுப்புவதும் பயனளிக்கப் போவதில்லை.