உமர் ஷரீஃப் — 7
2:38 நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். ஆக, எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
2:39 இன்னும், எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”
2:40 இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள். இன்னும், எனது உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நான் உங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுவேன். இன்னும், என்னையே நீங்கள் பயப்படுங்கள்.
2:41 இன்னும், உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும் இதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக (அவற்றில் கூறப்பட்ட சட்டங்களை மறைப்பதற்காக அல்லது, மாற்றுவதற்காக) சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்! இன்னும், நீங்கள் என்னையே அஞ்சுங்கள்!
2:42 இன்னும், உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்! இன்னும், நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் உண்மையை மறைக்காதீர்கள்!
2:43 இன்னும், (இஸ்லாமை ஏற்று முஸ்லிம்களுடன்) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், (தொழுகையில்) குனி(ந்து பணி)பவர்களுடன் (சேர்ந்து) குனி(ந்து பணி)யுங்கள்.
2:44 நீங்களோ வேதத்தை ஓதுபவர்களாக இருக்கும் நிலையில் உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
2:45 இன்னும், நீங்கள் பொறுமையாக இருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். இன்னும், நிச்சயமாக அது (-தொழுகை) பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.
2:46 (உள்ளச்சமுடைய) அவர்கள் “நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பார்கள் என்றும் அவனிடமே நிச்சயமாக அவர்கள் திரும்புவார்கள்” என்றும் நம்புவார்கள்.
2:47 இஸ்ராயீலின் சந்ததிகளே! நான் உங்கள் மீது அருள்புரிந்த என் அருளையும் நிச்சயமாக நான் உலகத்தார்களைவிட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நீங்கள் நினைவு கூருங்கள்.
2:48 இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்! (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் பலனளிக்காது. இன்னும் அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது. இன்னும் அதனிடமிருந்து மீட்புத் தொகை வாங்கப்படாது. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.