>

உமர் ஷரீஃப் — 603

109:1 (நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே!

109:2 நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.

109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.

109:4 இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை.

109:5 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.

109:6 உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.

110:1 (நபியே!) அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வந்தால்,

110:2 இன்னும், மக்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்த்தால்,

110:3 ஆக, உம் இறைவனின் புகழைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக! இன்னும், அவனிடம் மன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக, தவ்பாவை அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.

111:1 அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும். இன்னும், அவனும் அழியட்டும்.

111:2 அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)

111:3 அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.

111:4 இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).

111:5 அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.