உமர் ஷரீஃப் — 601
103:1 காலத்தின் மீது சத்தியமாக!
103:2 நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான்.
103:3 எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் நஷ்டவாளிகள் இல்லை.)
104:1 புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.
104:2 எவன் செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தானோ,
104:3 “நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும்” என அவன் கருதுகிறான்.
104:4 அவ்வாறல்ல! நிச்சயமாக அவன் ஹுதமா நரகத்தில் எறியப்படுவான்.
104:5 (நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
104:6 அதுதான் அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.
104:7 அது (உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும்.
104:8 நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)
104:9 உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்).
105:1 (நபியே!) யானைப் படைகளுடன் உமது இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:2 அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?
105:3 இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.
105:4 அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன.
105:5 ஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான்.