>

உமர் ஷரீஃப் — 599

98:6 நிச்சயமாக வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் ஜஹன்னம் எனும் நரக நெருப்பில் - அதில் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா தீயோர் ஆவார்கள்.

98:7 நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்கள்தான் படைப்புகளில் மிகச் சிறந்தோர் ஆவார்கள்.

98:8 அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அத்ன் எனும் சொர்க்கங்களாகும். அவற்றின் கீழே நதிகள் ஓடுகின்றன. அவற்றில் எப்போதும் நிரந்தரமானவர்களாக அவர்கள் இருப்பார்கள். அல்லாஹ், அவர்களைப் பற்றி திருப்தி அடைவான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள். இது, தன் இறைவனைப் பயந்தவருக்கு (கிடைக்கும் நற்பாக்கியமாகும்).

99:1 பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது,

99:2 இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,

99:3 இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.

99:4 அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.

99:5 அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று.

99:6 அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக.

99:7 ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.

99:8 இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.

100:1 மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக!

100:2 இன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,

100:3 இன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,

100:4 ஆக, அவை அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.

100:5 ஆக, அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.