உமர் ஷரீஃப் — 597
94:3 அது, உம் முதுகை முறித்தது.
94:4 இன்னும், உமது நினைவை (உமது நற்பெயரை, உமது சிறப்பை) உமக்கு உயர்த்தினோம்.
94:5 ஆக, நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.
94:6 நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.
94:7 ஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக!
94:8 இன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!
95:1 அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஆலிவ் மரத்தின் மீது சத்தியமாக!
95:2 சினாய் மலை மீது சத்தியமாக!
95:3 அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக!
95:4 திட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்.
95:5 பிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (முற்றிலும் பலவீனம் ஏற்படுகிற தள்ளாடும் வயதிற்கு) அவனைத் திருப்பினோம்.
95:6 எனினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ (அவர்கள் தள்ளாடும் வயதை அடைந்து நல்லமல் செய்ய முடியாமல் ஆகிவிட்டாலும்) அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.
95:7 ஆக, இ(த்தனை சான்றுகளை விவரித்த)தற்குப் பின்னர், (அடியார்களின் அமல்களை அல்லாஹ் விசாரிப்பதில், இன்னும் அவர்களுக்கு) கூலி கொடுப்பதில் உம்மை யார் பொய்ப்பிப்பார்?
95:8 தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலான தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் இல்லையா?
96:1 (நபியே! இப்பிரபஞ்சத்தை) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!
96:2 அவன் மனிதர்களை (கற்பப் பையில்) ஒட்டியிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான்.
96:3 படிப்பீராக! இன்னும், உம் இறைவன் பெரும் கண்ணியவான் (பெரும் கொடையாளன்) ஆவான்.
96:4 அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
96:5 மனிதன் அறியாமல் இருந்ததை அவன் மனிதனுக்குக் கற்பித்தான்.
96:6 அவ்வாறல்ல! நிச்சயமாக மனிதன் (நிராகரிப்பிலும் பாவத்திலும்) எல்லை மீறுகிறான்,
96:7 (காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்.
96:8 நிச்சயமாக மீட்சி உம் இறைவன் பக்கம்தான் இருக்கிறது.
96:9 (நபியே!) தடுப்பவனைப் பற்றி அறிவிப்பீராக!
96:10 ஓர் அடியாரை அவர் தொழும்போது அவன் தடுக்கிறான்?
96:11 நீர் அறிவிப்பீராக! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
96:12 அல்லது, அவர் நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?