>

உமர் ஷரீஃப் — 594

89:23 இன்னும், அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதன் நல்லறிவு பெறுவான். (அப்போது) நல்லறிவு அவனுக்கு எப்படி பலன் தரும்?

89:24 “என் (மறுமை) வாழ்வுக்காக நான் (நன்மைகளை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!’’ எனக் கூறுவான்,

89:25 ஆக, அந்நாளில் அவனுடைய (-அல்லாஹ்வுடைய) தண்டனையை(ப் போன்று) ஒருவனும் தண்டிக்க முடியாது. (அல்லாஹ் பாவிகளை அவ்வளவு பயங்கரமாக தண்டிப்பான்.)

89:26 இன்னும், அவனுடைய (-அல்லாஹ்வுடைய) கட்டுதலை(ப் போன்று) ஒருவனும் கட்ட மாட்டான். (பழுக்க சூடுகாட்டப்பட்ட சங்கிலிகளில் பாவிகளுடைய கைகள், கால்கள், கழுத்துகள் மிகக் கடுமையாகக் கட்டப்படும்.)

89:27 நிம்மதியடைந்த ஆன்மாவே!

89:28 திருப்தி பெற்றதாக, திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பு!

89:29 ஆக, என் அடியார்களில் சேர்ந்து விடு!

89:30 இன்னும், என் சொர்க்கத்தில் நுழைந்து விடு!

90:1 இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

90:2 இன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்.

90:3 தந்தை மீதும், அவர் பெற்றெடுத்தவர்கள் மீதும் சத்தியமாக!

90:4 திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.

90:5 தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?

90:6 அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று (அவன் பெருமையாக) கூறுகிறான்.

90:7 அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?

90:8 இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?

90:9 இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?)

90:10 இன்னும், இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்.

90:11 ஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை.

90:12 (நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

90:13 (அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,

90:14 அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,

90:15 (யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,

90:16 அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்).

90:17 (இத்தகைய புண்ணியத்தை செய்த) பிறகு, (அத்துடன்) அவர் நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் ஆகிவிட வேண்டும்.

90:18 இ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்,