>

உமர் ஷரீஃப் — 589

83:34 ஆக, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.

83:35 கட்டில்கள் மீது அமர்ந்தவர்களாக (அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்.

83:36 நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா (இல்லையா)?

84:1 வானம் பிளந்துவிடும் போது,

84:2 இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது; இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படிந்துவிடும்போது;

84:3 இன்னும், பூமி விரிக்கப்படும்போது,

84:4 இன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது,

84:5 இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது, இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படியும்போது (மனிதனே நீ செய்த நன்மை, தீமையின் பலனை பார்ப்பாய்)!

84:6 மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் (சேருகிற வரை நல்லதை செய்வதில் அல்லது தீமை செய்வதில்) சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். ஆக, நீ அவனை (மறுமையில்) சந்திப்பாய். (அவன் உனது செயல்களுக்கு ஏற்ப உனக்குக் கூலி கொடுப்பான்.)

84:7 ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),

84:8 அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார். (அவருடைய அமல்கள் பற்றி இலகுவான கேள்விகள் கேட்கப்படுவார்.)

84:9 இன்னும், மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.

84:10 ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,

84:11 (எனது அழிவே என தனது) அழிவை அவன் அழைப்பான்.

84:12 இன்னும் சயீர் எனும் கொழுந்துவிட்டு எரிகிற நரகத்தில் நுழைந்து அவன் தீயில் எரிவான்.

84:13 நிச்சயமாக அவன் (உலகத்தில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.

84:14 நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.

84:15 ஏனில்லை! (அவன் கண்டிப்பாக இறைவனிடம் வருவான்.) நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

84:16 ஆக, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!

84:17 இரவின் மீது சத்தியமாக! அது (தனக்குள்) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!

84:18 சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,

84:19 நீங்கள் கடினமான ஒரு நிலையிலிருந்து கடினமான இன்னொரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிப்பீர்கள்.

84:20 ஆக, அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

84:21 இன்னும், (அவர்களுக்கு என்ன நேர்ந்தது?) அவர்களுக்கு முன்னர் அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் (இறைவனுக்கு) சிரம் பணிவதில்லை!

84:22 மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கிறார்கள்.

84:23 அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.

84:24 ஆக, துன்புறுத்துகிற தண்டனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!