>

உமர் ஷரீஃப் — 584

79:17 ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் எல்லை மீறினான்.

79:18 ஆக, (மூஸாவே!) நீர் (அவனிடம்) கூறுவீராக! “(ஃபிர்அவ்னே!) நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?”

79:19 “இன்னும், உன் இறைவனின் பக்கம் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கும், நீ (அவனைப்) பயந்து கொள்வதற்கும் உனக்கு விருப்பமா?”

79:20 ஆக, (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.

79:21 ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்.

79:22 பிறகு (நிராகரிப்பில்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.

79:23 இன்னும், (மக்களை) ஒன்று திரட்டினான்; கூவி அழைத்தான்.

79:24 இன்னும், நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.

79:25 ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான் (-தண்டித்தான்).

79:26 (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.

79:27 (மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகப் பலமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அ(ந்த வானத்)தை அமைத்தான்.

79:28 அதன் முகட்டை அவன் உயர்த்தினான், இன்னும் (அதில் மேடு பள்ளம் இல்லாமல்) அதை சமப்படுத்தினான். (-ஒழுங்குபடுத்தினான்.)

79:29 இன்னும், (சூரியனை மறைய வைத்து) அதன் இரவை இருளாக்கினான், இன்னும், (சூரியனை உதிக்க வைத்து) அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.

79:30 இன்னும், அதன் பின்னர், பூமியை விரித்(து அதனுள் மனிதனுக்கு தேவையானவற்றை வைத்)தான்.

79:31 அதிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.

79:32 இன்னும், மலைகளை (அதில்) ஆழமாக ஊன்றினான்.

79:33 உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றை எல்லாம் இறைவன் படைத்தான்).

79:34 ஆக, (-எக்காளத்தில் முதல் ஊதுதல் ஊதப்பட்டு மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,

79:35 மனிதன், தான் செய்ததை நினைத்துப் பார்க்கிற நாளில் (அந்த அழிவு நிகழும்).

79:36 இன்னும், (அந்நாளில்) பார்ப்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும். (எல்லோரும் அதை பார்ப்பார்கள்.)

79:37 ஆகவே, யார் (தனது இறைவனுக்கு மாறு செய்து பெருமையடித்து) எல்லை மீறினானோ,

79:38 இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,

79:39 (அவனுக்கு) நிச்சயமாக நரகம்தான் தங்குமிடம் ஆகும்.

79:40 ஆக, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தனது) மன இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,

79:41 (அவனுக்கு) நிச்சயமாக சொர்க்கம்தான் தங்குமிடம் ஆகும்.

79:42 (நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.

79:43 (எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அது பற்றி ஞானம் இல்லையே!)

79:44 உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு இருக்கிறது.

79:45 (நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுவோரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர, அது நிகழப்போகும் காலத்தை அறிவிப்பவரல்ல.)

79:46 அதை அவர்கள் (கண்ணால்) பார்க்கிற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில்) அவர்கள் தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத்) தோன்றும்.