உமர் ஷரீஃப் — 578
75:20 அவ்வாறல்ல! (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறீர்கள்.
75:21 இன்னும் மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
75:22 அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக, அழகாக) இருக்கும்.
75:23 தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.
75:24 இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் (விகாரமாக) இருக்கும்.
75:25 அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அது அறிந்துகொள்ளும்.
75:26 அவ்வாறல்ல! (-அவர்கள் தங்களது இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நினைப்பது போல் அல்ல. பாவிகளின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,
75:27 இன்னும், ஓதிப்பார்ப்பவர் யாரும் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டால்,
75:28 இன்னும், நிச்சயமாக இது (உலகை விட்டு போவதற்குரிய) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,
75:29 இன்னும், (மறுமை எனும்) கெண்டைக் காலுடன் (உலகம் எனும்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)
75:30 அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)
75:31 ஆக, அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.
75:32 எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.
75:33 பிறகு, அவன் தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்.
75:34 உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்.
75:35 பிறகு, உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்.
75:36 மனிதன், எண்ணுகிறானா, தான் கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடப்படுவான் என்று?
75:37 அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?
75:38 பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். ஆக, (அவனை இறைவன்) படைத்தான். இன்னும், (அவனை முழு மனிதனாக பார்ப்பவனாக செவியுறுபவனாக பேசுபவனாக) சரிப்படுத்தினான்.
75:39 ஆக, அவனிலிருந்து ஆண், பெண் இனத்தவர்களை அவன் படைக்கிறான்.
75:40 இ(த்தகைய பேராற்றல் உள்ள இறை)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா?
76:1 காலத்தில் ஒரு பகுதி நேரம் மனிதனுக்கு (இப்படி) வரவில்லையா, (அந்த நேரத்தில்) நினைவு கூறப்படுகின்ற (-பேசப்படுகின்ற) ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை?
76:2 நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண்ணுடைய இந்திரியத்தில் இருந்து) கலக்கப்பட்ட விந்துத் துளியிலிருந்து படைத்தோம். அவனை நாம் சோதிக்கிறோம். ஆக, செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை ஆக்கினோம்.
76:3 நிச்சயமாக நாம் அவனுக்கு (நேரான) பாதையை வழிகாட்டினோம், ஒன்று, அவன் நன்றி உள்ளவனாக இருப்பதற்கு; அல்லது, நன்றி கெட்டவனாக இருப்பதற்கு.
76:4 நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களுக்கு (அவர்களின் கை, கால்களை கட்டுவதற்கு) சங்கிலிகளையும் விலங்குகளையும் கொழுந்து விட்டெரியக்கூடிய நெருப்பையும் தயார் செய்துள்ளோம்.
76:5 நிச்சயமாக நல்லவர்கள் மது குவளையிலிருந்து பருகுவார்கள், அதன் கலப்பு காஃபூர் நறுமணத்தால் இருக்கும்.