உமர் ஷரீஃப் — 572
72:1 (நபியே!) கூறுவீராக! நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள் (நான் குர்ஆன் ஓதுவதை) செவியுற்றனர் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது. மேலும், அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நாங்கள் அதிசயமான குர்ஆனை செவியுற்றோம்.
72:2 அது, நேர்வழிக்கு வழிகாட்டுகிறது. ஆகவே, நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம்; இன்னும், எங்கள் இறைவனுக்கு ஒருவரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம்.
72:3 நிச்சயமாக விஷயமாவது, எங்கள் இறைவனின் மதிப்பு மிக உயர்ந்தது. அவன் (தனக்கு) மனைவியையும் பிள்ளைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை.
72:4 இன்னும் நிச்சயமாக விஷயமாவது, எங்களில் உள்ள (-இப்லீஸ் ஆகிய) மூடன் அல்லாஹ்வின் மீது அநியாயமான (-உண்மைக்கு புறம்பான விஷயத்)தை கூறுபவனாக இருந்தான்.
72:5 இன்னும், “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார்கள் என்று நிச்சயமாக நாங்கள் நம்பினோம்.
72:6 இன்னும் நிச்சயமாக விஷயமாவது, மனிதர்களில் உள்ள ஆண்கள் சிலர் ஜின்களில் உள்ள ஆண்கள் சிலரிடம் பாதுகாவல் தேடினர். எனவே அவர்கள் (-ஆண் ஜின்கள்) அவர்களுக்கு (மனித ஆண்களுக்கு) பயத்தை (திகிலை) அதிகப்படுத்தினர்.
72:7 இன்னும் நிச்சயமாக விஷயமாவது, அவர்கள் (-ஜின்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) நீங்கள் (-மனிதர்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) எண்ணுவது போன்றுதான் அல்லாஹ் ஒருவரையும் (அவர் மரணித்த பின்னர் மறுமையில்) அறவே எழுப்ப மாட்டான் என்று எண்ணினர்.
72:8 இன்னும், நிச்சயமாக நாங்கள் வானத்தை (சென்றடைய)த் தேடினோம். ஆக, அது கடுமையான காவல்களாலும் எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதாக அதை நாங்கள் கண்டோம்.
72:9 இன்னும், நிச்சயமாக நாங்கள் அ(ந்த வானத்)தில் பல இடங்களில் (வானவர்கள் பேசுகின்ற செய்தியை) ஒட்டுக்கேட்க உட்காருபவர்களாக இருந்தோம். ஆக, இப்போது யார் ஒட்டுக் கேட்பாரோ அவரை (எரிக்க) எதிர்பார்த்திருக்கின்ற எரி நட்சத்திரத்தை காண்பார்.
72:10 இன்னும், நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம், “பூமியில் உள்ளவர்களுக்கு தீமை ஏதும் நாடப்பட்டதா? அல்லது, அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடினானா?” என்று.
72:11 இன்னும் நிச்சயமாக எங்களில் நல்லவர்களும் உள்ளனர். இன்னும், எங்களில் அவர்கள் அல்லாத மற்ற (தீய)வர்களும் உள்ளனர். நாங்கள் பலதரப்பட்ட பிரிவுகளாக இருந்தோம்.
72:12 இன்னும், நிச்சயமாக நாங்கள் அறிந்தோம், அதாவது “நாங்கள் பூமியில் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க அறவே முடியாது; இன்னும் நாங்கள் (அவனை விட்டும்) ஓடி (ஒளிந்து) அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது (அவனை விட்டும் நாங்கள் எங்கும் தப்பிக்க முடியாது)” என்று.
72:13 இன்னும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை செவியுற்றபோது நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். ஆக, எவர் தன் இறைவனை நம்பிக்கை கொள்வாரோ அவர் (தனது நன்மைக்குரிய கூலி) குறைவதையும் (தான் செய்யாத குற்றத்தை தன் மீது சுமத்தப்படுகின்ற) அநியாயத்தையும் பயப்படமாட்டார்.