>

உமர் ஷரீஃப் — 570

70:41 இவர்களை விட சிறந்தவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கு (நாம் ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்). நாம் பலவீனமானவர்கள் அல்ல.

70:42 ஆக, அவர்களை விட்டுவிடுவீராக! அவர்கள் (தங்கள் பொய்களில்) மூழ்கி இருக்கட்டும்! (தங்கள் உலக காரியங்களில், வீண் விளையாட்டுகளில், வேடிக்கைகளில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்பட்ட அவர்களது (தண்டனைக்குரிய) நாளை அவர்கள் சந்திப்பார்கள்!

70:43 அவர்கள் புதைக்குழிகளில் இருந்து விரைவாக வெளியேறுகிற நாளில், அவர்களோ (நிறுத்திவைக்கப்பட்டுள்ள) கம்பத்தின் பக்கம் விரைந்து ஓடுகிறவர்கள் போல் (விரைந்து ஓடி வருவார்கள்).

70:44 அவர்களின் பார்வைகள் (இழிவால்) கீழ்நோக்கி இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். இதுதான் இவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த (மறுமை) நாளாகும்.

71:1 நிச்சயமாக நாம் நூஹை - அவருடைய மக்களின் பக்கம் (தூதராக) - அனுப்பினோம். ஏனெனில், நீர் உமது மக்களை - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு வருவதற்கு முன்னர் - எச்சரிப்பீராக!

71:2 அவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.”

71:3 “அதாவது, நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!

71:4 அவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; இன்னும், குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே!”

71:5 அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எனது மக்களை இரவிலும் பகலிலும் அழைத்தேன்.

71:6 ஆனால், எனது அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை, (அவர்கள் எனது அழைப்பிலிருந்து) விரண்டு ஓடுவதைத் தவிர.

71:7 நீ அவர்களை மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் அவர்கள் தங்கள் விரல்களை தங்கள் காதுகளில் ஆக்கிக் கொண்டனர். (என்னை அவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக தங்களை) தங்கள் ஆடைகளால் மூடிக்கொண்டனர். இன்னும், (நிராகரிப்பில்) பிடிவாதம் பிடித்தனர். பெருமையடித்தனர்.

71:8 பிறகு, நிச்சயமாக நான் அவர்களை பகிரங்கமாக அழைத்தேன்.

71:9 பிறகு, நிச்சயமாக நான் அவர்களிடம் (பொது இடத்தில்) வெளிப்படையாகப் பேசினேன். இன்னும் அவர்களிடம் தனியாக இரகசியமாகப் பேசினேன்.

71:10 ஆக, நான் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.