>

உமர் ஷரீஃப் — 559

65:6 உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் தங்கும் இடத்தில் அவர்களை தங்க வையுங்கள்! (தங்குமிடத்தில்) அவர்கள் மீது நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக (-அவர்களை வெளியேற்றுவதற்காக) அவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பம் உள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் தங்கள் கர்ப்பத்தை ஈன்றெடுக்கின்ற வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் பிள்ளைகளுக்கு) பாலூட்டினால் அவர்களின் ஊதியங்களை அவர்களுக்குக் கொடுங்கள்! உங்களுக்கு மத்தியில் நல்லதை ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்! (ஒருவர் கூறுகின்ற நல்லதை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளட்டும்.) நீங்கள் (கணவன், மனைவி இருவரும்) சிரமமாகக் கருதினால் அவருக்காக (கணவருக்காக அவரின் குழந்தைக்கு) வேறு ஒரு பெண் பாலூட்டுவாள்.

65:7 வசதியுடையவர் தனது வசதியிலிருந்து செலவு செய்யட்டும். எவர் ஒருவர் அவர் மீது அவருடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக இருக்கிறதோ அவர் தனக்கு அல்லாஹ் கொடுத்ததில் இருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஓர் ஆன்மாவிற்கு சிரமம் கொடுக்க மாட்டான், அவன் அதற்கு கொடுத்ததற்கே தவிர (அவன் அதற்கு கொடுத்த சக்திக்கு உட்பட்டே தவிர). சிரமத்திற்கு பின்னர் (-பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்) அல்லாஹ் இலகுவை (செல்வ விசாலத்தை) ஏற்படுத்துவான்.

65:8 எத்தனையோ ஊர்கள், அவற்றின் இறைவனின் கட்டளையையும் அவற்றின் தூதரின் கட்டளையையும் மீறி (பாவம் செய்த)ன. நாம் அவற்றை கடுமையான விசாரணையால் விசாரித்தோம். இன்னும், அவற்றை மோசமான தண்டனையால் தண்டித்தோம்.

65:9 ஆக, (அந்த ஊர்கள்) தமது காரியத்தின் கெட்ட முடிவை சுவைத்தன. அவற்றுடைய காரியத்தின் (-அந்த ஊரார்களின் செயல்களின்) முடிவு மிக நஷ்டமாகவே ஆகிவிட்டது.

65:10 அல்லாஹ் அவர்களுக்கு (-அவ்வூர்வாசிகளுக்கு) கடுமையான தண்டனையை தயார் செய்துள்ளான். ஆகவே, நம்பிக்கை கொண்ட நிறைவான அறிவுடையவர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு திட்டமாக நல்லுபதேசத்தை இறக்கினான்.

65:11 (இன்னும்) ஒரு தூதரை அனுப்பி இருக்கிறான். அவர் உங்களுக்கு அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார். ஏனெனில், நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் அவன் வெளியேற்றுவதற்காக (தூதரை அனுப்பினான்). எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் எப்போதும் நிரந்தரமாகத் தங்குவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு (அங்கு) வாழ்வாதாரத்தை (உணவு, குடிபானம், இன்னும் எல்லாத் தேவைகளையும்) மிக அழகாக (விசாலமாக, குறைவின்றி, முடிவில்லாமல்) ஆக்கி வைத்திருக்கிறான்.

65:12 அல்லாஹ்தான் ஏழு வானங்களை படைத்தான். இன்னும், பூமியில் அவற்றைப் போன்று (-ஏழு பூமிகளை) படைத்தான். அவற்றுக்கு மத்தியில் (அவனுடைய) கட்டளைகள் இறங்குகின்றன. “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிவு ஞானத்தால் சூழ்ந்துள்ளான்” என்பதை நீங்கள் அறிவதற்காக (இவற்றை அவன் உங்களுக்கு விவரிக்கிறான்).