>

உமர் ஷரீஃப் — 542

58:1 (நபியே!) உம்மிடம் தனது கணவரின் விஷயத்தில் விவாதிக்கின்றவளின் பேச்சை திட்டமாக அல்லாஹ் செவியுற்றான். இன்னும், அவள் (தனது கவலையை) அல்லாஹ்விடம் முறையி(ட்டு அதற்கான தீர்வை மன்றா)டுகிறாள். அல்லாஹ் உங்கள் இருவரின் உரையாடலை செவியுறுகிறான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.

58:2 உங்களில் எவர்கள் தங்கள் மனைவிகளிடம் ளிஹார் செய்கிறார்களோ அந்த பெண்கள் அவர்களின் தாய்மார்களாக ஆகமுடியாது. அவர்களின் தாய்மார்களாக இல்லை அவர்களை எவர்கள் பெற்றெடுத்தார்களோ அவர்களைத் தவிர. (ளிஹார் செய்வதன் மூலமாக) நிச்சயமாக அவர்கள் பேச்சில் மிகத் கெட்டதையும் (மார்க்க சட்டத்தில் அறியப்படாததையும்) பொய்யானதையும் கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.

58:3 இன்னும், எவர்கள் தங்கள் மனைவிகளிடம் ளிஹார் செய்து, பிறகு தாங்கள் கூறியதற்கு (-தங்கள் அந்த தவறை திருத்திக்கொள்வதற்கு) மீளுகிறார்களோ அவர்கள் (-ளிஹார் செய்த அந்த கணவனும் அவருடைய மனைவியும் இல்லற உறவில்) சேர்வதற்கு முன்னர் ஓர் அடிமையை உரிமையிட வேண்டும். இதுதான் (அல்லாஹ்வின் சட்டம்), நீங்கள் அ(தை செய்வ)தற்கு உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.

58:4 ஆக, எவர் (அடிமையை உரிமையிட) வசதி பெறவில்லையோ அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் (ளிஹார் செய்த அந்த கணவனும் அவரது மனைவியும் இல்லற வாழ்க்கையில்) சேர்வதற்கு முன்னர். ஆக, எவர் (இதற்கு) சக்தி பெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்கிறீர்கள் என்பதற்காக ஆகும். இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும், துன்புறுத்தும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு.

58:5 நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறார்களோ (மாறுசெய்கிறார்களோ, அவர்களின் சட்டங்களை எதிர்க்கிறார்களோ) அவர்கள், அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் இழிவுபடுத்தப்பட்டது போன்று இழிவு படுத்தப்படுவார்கள். இன்னும், திட்டமாக நாம் தெளிவான அத்தாட்சிகளை இறக்கினோம். இழிவுதரும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு.

58:6 அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்). ஆக, அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு (அப்போது) அறிவிப்பான். அல்லாஹ் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அவற்றை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் (அவற்றுக்கு சாட்சியாளன்) ஆவான்.