>

உமர் ஷரீஃப் — 529

54:7 அவர்களது பார்வைகள் இழிவடைந்த நிலையில், (கூட்டமாக) பரவி வரக்கூடிய வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளை விட்டு (விரைந்து) வெளியேறுவார்கள்.

54:8 அழைப்பாளரை நோக்கி பணிவுடன், பயத்துடன், விரைந்தவர்களாக வருவார்கள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இது ஒரு சிரமமான நாளாகும்.”

54:9 (குறைஷிகளாகிய) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் (தூதர்களை) பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினார்கள். இன்னும், அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.

54:10 ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் (பலவீனமாக இருக்கிறேன்,) தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ (எனக்காக) பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.

54:11 ஆகவே, நாம் அடை மழையைக் கொண்டு மேகத்தின் வாசல்களை திறந்து விட்டோம்.

54:12 இன்னும், பூமியின் ஊற்றுக் கண்களை பீறிட்டு ஓடச்செய்தோம். ஆக, (வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும்) தண்ணீர் நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக திட்டமாக சந்தித்தன.

54:13 இன்னும், அவரை பலகைகளும் ஆணிகளுமுடைய கப்பலில் பயணிக்க வைத்தோம்.

54:14 அது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப்படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்குக் கூலி கொடுப்பதற்காக.

54:15 அதை ஓர் அத்தாட்சியாக திட்டவட்டமாக நாம் விட்டுவைத்தோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?

54:16 ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?

54:17 திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?

54:18 ஆது சமுதாயம் பொய்ப்பித்தது. ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?

54:19 நிச்சயமாக நாம் அவர்கள் மீது குளிர்ந்த சூறாவளிக் காற்றை (நரகம் வரை) நீடித்து நிலையாக இருக்கும் (தண்டனை உடைய) ஒரு தீய நாளில் அனுப்பினோம்.

54:20 அது மக்களை கழட்டி எறிந்தது. அவர்கள் வேரோடு சாய்ந்த பேரீட்ச மரத்தின் பின் பகுதிகளைப் போல் ஆகிவிட்டார்கள்.

54:21 ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?

54:22 திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?

54:23 ஸமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.

54:24 ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்களில் இருந்து ஒருவராக இருக்கின்ற ஒரு மனிதரையா நாங்கள் பின்பற்றுவோம்! அப்படி என்றால், நிச்சயமாக நாங்கள் வழிகேட்டிலும் சிரமத்திலும் ஆகிவிடுவோம்.”

54:25 “எங்களுக்கு மத்தியில் அவருக்கு மட்டும் இறைவேதம் இறக்கப்பட்டதா? இல்லை, அவர் பெரும் பொய்யர், திமிறு பிடித்து பெருமை பேசுகிறவர் ஆவார்.”

54:26 “பெரும் பொய்யர், திமிறு பிடித்து பெருமை பேசுகிறவர் யார்” என்பதை நாளை அவர்கள் அறிவார்கள்,

54:27 நிச்சயமாக நாம் பெண் ஒட்டகத்தை அவர்களுக்கு சோதனையாக அனுப்புவோம். ஆக, அவர்களிடம் (அவர்களுக்கு வர இருக்கின்ற தண்டனையை) நீர் எதிர்பார்த்திருப்பீராக! இன்னும், (சகிப்புடன்) பொறுமையாக இருப்பீராக!