>

உமர் ஷரீஃப் — 527

53:27 நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள், வானவர்களுக்கு பெண்களின் பெயர்களை பெயர் சூட்டுகிறார்கள்.

53:28 அவர்களுக்கு அ(வர்கள் செய்வ)தைப் பற்றி எவ்வித கல்வி அறிவும் இல்லை. வீண் எண்ணத்தைத் தவிர அவர்கள் (உண்மையை) பின்பற்றுவதில்லை. நிச்சயமாக வீண் எண்ணம் உண்மைக்கு பதிலாக அறவே பலன் தராது. (உண்மையின் இடத்தில், அதற்கு சமமாக வீண் எண்ணம், கற்பனை கதைகள் நிற்கமுடியாது.)

53:29 ஆகவே, நமது நினைவை விட்டு (-குர்ஆனை விட்டு) விலகியவர்களை (நபியே!) நீர் புறக்கணிப்பீராக! உலக வாழ்க்கையைத் தவிர (மறுமையை) அவர்கள் நாடவில்லை.

53:30 அதுதான் அவர்களது கல்வியின் முதிர்ச்சியாகும். நிச்சயமாக உமது இறைவன், அவனுடைய பாதையை விட்டு வழிதவறியவர்களை மிக அறிந்தவன். இன்னும், அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.

53:31 வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன. இறுதியில், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்கு (தகுந்த தண்டனையை) அவன் கூலி(யாகக்) கொடுப்பான். இன்னும், நன்மை செய்தவர்களுக்கு (மிக அழகிய) சொர்க்கத்தை அவன் கூலி(யாகக்) கொடுப்பான்.

53:32 அவர்கள் எத்தகையோர் என்றால் பெரும் பாவங்கள், இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இருப்பார்கள், (மனதில் வந்துபோகும்) சிறு ஆசைகளைத் தவிர (அல்லது சிறிய தவறுகளைத் தவிர. அந்த சிறு தவறுகளை அல்லாஹ் அவர்களுக்கு மன்னித்து விடுவான்). நிச்சயமாக உமது இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். அவன் உங்களை பூமியில் இருந்து உருவாக்கியபோதும் (ஆதமை மண்ணிலிருந்து படைத்தபோதும், பிறகு,) நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்தபோதும் அவன் உங்களை (-யார் நல்லவர், யார் தீயவர் என்று) மிக அறிந்தவனாக இருக்கிறான். ஆகவே, (நீங்கள் தூய்மையானவர்கள் என்று) நீங்களே உங்களை உயர்வாக பேசிக்கொள்ளாதீர்கள்! இறையச்சமுள்ளவர்ளை அவன் மிக அறிந்தவன் ஆவான்.

53:33 (நபியே!) நீர் அறிவிப்பீராக! ஒருவன் (இந்த மார்க்கத்தை விட்டு) புறக்கணித்தான்;

53:34 இன்னும், (தனது நண்பனுக்கு தனது செல்வத்தில் இருந்து) கொஞ்சம் கொடுத்தான். பிறகு, (அதை கருமித்தனத்தால்) நிறுத்திவிட்டான்.

53:35 அவனிடம் மறைவானதின் அறிவு இருக்கிறதா? அவன் (என்ன விதியில் எழுதப்பட்ட மறைவானதைப்) பார்க்கிறானா?

53:36 மூஸாவின் ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?

53:37 இன்னும், (தனது தூதுத்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய ஏட்டில் உள்ளதைப் பற்றி (அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)

53:38 அதாவது, பாவம் செய்த ஆன்மா மற்றொரு பாவியான ஆன்மாவின் பாவத்தை சுமக்காது.

53:39 இன்னும், நிச்சயமாக மனிதனுக்கு இல்லை, அவன் எதை அடைய முயற்சித்தானோ அதைத் தவிர!

53:40 இன்னும், நிச்சயமாக தனது முயற்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்.

53:41 பிறகு, மிக பூரணமான கூலியை அதற்கு அவன் (கூலியாக) கொடுக்கப்படுவான்.

53:42 இன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது.

53:43 இன்னும், நிச்சயமாக அவன்தான் சிரிக்க வைக்கிறான்; அழ வைக்கிறான்.

53:44 இன்னும், நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கிறான்; உயிர் கொடுக்கிறான்.