உமர் ஷரீஃப் — 526
53:1 (சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது,
53:2 உங்கள் தோழர் (சத்திய பாதையிலிருந்து) வழி தவறவுமில்லை, (நேரிய கொள்கையிலிருந்து) வழி கெடவுமில்லை. (அவர் நேர்வழியிலும் சரியான கொள்கையிலும்தான் இருக்கிறார்.)
53:3 இன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார்.
53:4 இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை.
53:5 (பலவிதமான) ஆற்றல்களால் கடும் பலசாலி(யான ஜிப்ரீல்) அவருக்கு இதை கற்பித்தார்.
53:6 அவர் (வலிமையும்) அழகிய தோற்றமு(ம் உ)டையவர். ஆக, அவர் (நபியை நேருக்கு நேர்) சமமாக சந்தித்தார்.
53:7 (தூதரான) அவரும் (வானவரான ஜிப்ரீலும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு நேர் சமமானார்கள்).
53:8 பிறகு, அவர் (தூதருக்கு) சமீபமானார். இன்னும், மிக அதிகமாக (அவரை) நெருங்கினார்.
53:9 அவர், (தூதருக்கு) இரண்டு வில்லின் அளவுக்கு அல்லது அதைவிட மிக அருகாமையில் ஆகிவிட்டார்.
53:10 ஆக, அவனுடைய (-அல்லாஹ்வுடைய) அடிமை(யாகிய நபி)க்கு ஜிப்ரீல் (தமக்கு) எதை (தமது இறைவன்) வஹ்யி அறிவித்தானோ அதை (நபி அவர்களுக்கு) வஹ்யி அறிவித்தார்.
53:11 (நபி) எதை (தனது கண்களால்) பார்த்தாரோ அதை (அவருடைய) உள்ளம் பொய்ப்பிக்கவில்லை. (உள்ளமும் அதை நம்பிக்கை கொண்டது.)
53:12 ஆக, அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கிறீர்களா?
53:13 திட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார்,
53:14 “சித்ரத்துல் முன்தஹா” என்ற இடத்தில்.
53:15 அங்குதான் “அல்மஃவா” சொர்க்கம் இருக்கிறது.
53:16 எது சூழ்ந்து கொள்ளுமோ அது அந்த இலந்தை மரத்தை சூழ்ந்து கொள்ளும்போது (தூதர் வானவரை மற்றொரு முறை பார்த்தார்).
53:17 (நபியின்) பார்வை (அவர் பார்த்ததை விட்டும் இங்கும் அங்கும்) சாயவுமில்லை, இன்னும், (அல்லாஹ் அவருக்கு நிர்ணயித்த எல்லையை) மீறவுமில்லை.
53:18 திட்டவட்டமாக அவர் தனது இறைவனின் பெரிய அத்தாட்சிகளில் (ஒன்றைப்) பார்த்தார்.
53:19 லாத், உஸ்ஸா பற்றி நீங்கள் அறிவியுங்கள்!
53:20 இன்னும், மற்றொரு மூன்றாவது மனாத்தைப் பற்றி அறிவியுங்கள்! (-இவை, அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள் என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?)
53:21 உங்களுக்கு (நீங்கள் விரும்புவதைப் போல) ஆண்பிள்ளையும் அவனுக்கு (நீங்கள் உங்களுக்கு வெறுக்கிற) பெண் பிள்ளையுமா? (இப்படியா நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்)!
53:22 அப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும்.
53:23 இவை எல்லாம் (வெறும்) பெயர்களாகவே தவிர (உண்மை) இல்லை. இந்த பெயர்களை நீங்களும் உங்கள் மூதாதைகளும் (இந்த சிலைகளுக்கு) சூட்டினீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு ஆதாரம் எதையும் இறக்கவில்லை. வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புவதையும் தவிர இவர்கள் (உண்மையான ஆதாரத்தை) பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து (வணங்கத் தகுதியானவன் யார் என்பதை விவரிக்கும்) நேர்வழி திட்டவட்டமாக வந்திருக்கிறது.
53:24 மனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா?
53:25 ஆக, மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது.
53:26 வானங்களில் உள்ள எத்தனையோ வானவர்கள், அவர்களின் சிபாரிசு (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து) எதையும் தடுக்காது அல்லாஹ்வின் அனுமதிக்கு பின்னரே தவிர, (அதுவும்) அவன் நாடுகிற, அவன் விரும்புகிறவருக்கு (மட்டுமே பலன் தரும்).