>

உமர் ஷரீஃப் — 498

44:40 நிச்சயமாக தீர்ப்பு நாள் இவர்கள் அனைவரின் (தண்டனைக்காக) நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்.

44:41 அந்நாளில் நண்பன், நண்பனை விட்டு (உறவுக்காரன் உறவுக்காரனை விட்டு தண்டனையில்) எதையும் தடுக்க மாட்டான். இன்னும், அவர்கள் (ஆதரவு வைத்த யாராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.

44:42 அல்லாஹ் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்களைத் தவிர. (மற்றவர் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது). நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்.

44:43 நிச்சயமாக ஸக்கூம் மரம்

44:44 பாவிகளின் உணவாகும்.

44:45 உருக்கப்பட்ட செம்பைப் போல், வயிறுகளில் அது கொதித்துக் கொண்டிருக்கும்,

44:46 கடுமையாக கொதிக்கின்ற தண்ணீர் கொதிப்பதைப் போல்.

44:47 அவனைப் பிடியுங்கள்! ஆக, நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்!

44:48 பிறகு, அவனது தலைக்கு மேல் கொதிக்கின்ற நீரை ஊற்றுங்கள். (அதன் தண்டனை அவனை விட்டு பிரியாமல் இருக்கும்.)

44:49 நீ (இந்த தண்டனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன்.

44:50 நிச்சயமாக, நீங்கள் சந்தேகிப்பவர்களாக இருந்தது இதுதான்.

44:51 நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில்,

44:52 சொர்க்கங்களில், ஊற்றுகளில் இருப்பார்கள்.

44:53 அவர்கள் மென்மையான, தடிப்பமான பட்டு ஆடைகளை அணிவார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.

44:54 இவ்வாறுதான் (அவர்கள் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்). இன்னும், நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம்.

44:55 அதில் எல்லா (வகையான)ப் பழங்களையும் (அவர்கள் உண்பதற்கு அவர்களின் பணியாளர்களிடம்) கேட்பார்கள். அவர்கள் (நிம்மதியாக) பாதுகாப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

44:56 அதில் மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (உலகத்தில் அவர்கள் மரணித்த) முதல் மரணத்தைத் தவிர. (சொர்க்கத்தில் மரணம் இருக்காது.) இன்னும், நரகத்தின் தண்டனையை விட்டும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்.

44:57 உமது இறைவனின் அருளினால் (இவை எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்). இதுதான் மகத்தான வெற்றியாகும்.

44:58 ஆக, உமது (அரபி) மொழியில் இ(ந்த வேதத்)தை (கற்பதையும் கற்பிப்பதையும்) நாம் இலகுவாக்கி வைத்ததெல்லாம் அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்.

44:59 ஆக, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.