உமர் ஷரீஃப் — 452
37:154 உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?
37:155 ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
37:156 அல்லது, உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?
37:157 ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் (கூற்றுக்கு ஆதாரமாக இருக்கின்ற) வேதத்தைக் கொண்டு வாருங்கள்.
37:158 அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக அவர்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று திட்டவட்டமாக அந்த ஜின்கள் அறிந்து கொண்டனர்.
37:159 அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
37:160 (எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)
37:161 ஆக, நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,
37:162 அதன் மூலம் (யாரையும்) நீங்கள் வழி கெடுப்பவர்களாக இல்லை,
37:163 யார் நரகத்தில் எரிந்து பொசுங்குவாரோ அவரைத் தவிர. (நரகவாசிகள் என்று முடிவாகிவிட்டவர்களைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)
37:164 (வானவர்கள் கூறுவார்கள்:) “எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.”
37:165 இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) அணிவகுத்து நிற்பவர்கள்.
37:166 இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை) துதித்து தொழுபவர்கள்.
37:167 நிச்சயமாக (இந்த மக்காவாசிகள்) கூறுபவர்களாக இருந்தனர்:
37:168 “நிச்சயமாக முன்னோரிடம் இருந்த வேதம் எங்களிடம் இருந்திருந்தால்,
37:169 நாங்களும் அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”
37:170 ஆக (அது வந்த பின்னர் இப்போது) அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
37:171 திட்டவட்டமாக நமது வாக்கு தூதர்களான நமது அடியார்களுக்கு முந்திவிட்டது.
37:172 நிச்சயமாக அவர்கள்தான் உதவப்படுவார்கள்.
37:173 நிச்சயமாக நமது இராணுவம்தான் வெற்றி பெறுவார்கள்.
37:174 ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை விலகி இருப்பீராக!
37:175 இன்னும், (நபியே!) அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களுக்கு இறங்கப் போகும் தண்டனையை அவர்கள்) விரைவில் பார்ப்பார்கள்.
37:176 ஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக வேண்டுகின்றனரா?
37:177 ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த) அதிகாலை மிக கெட்டதாக இருக்கும்.
37:178 சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக!
37:179 இன்னும், (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராக! ஆக, (அவர்களுக்கு இறங்கப் போகின்ற தண்டனையை) விரைவில் அவர்கள் பார்ப்பார்கள்.
37:180 கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்.
37:181 இறைத்தூதர்களுக்கு ஸலாம் உண்டாகுக!
37:182 இன்னும், அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உரித்தாகுக!