>

உமர் ஷரீஃப் — 450

37:103 ஆக, அப்போது அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.

37:104 இன்னும், “இப்ராஹீமே!” என்று நாம் அவரை அழைத்தோம்.

37:105 “திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.”

37:106 நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்.

37:107 இன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.

37:108 இன்னும், பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.

37:109 இப்ராஹீமுக்கு ஸலாம் உண்டாகட்டும்.

37:110 இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

37:111 நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.

37:112 இன்னும், நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.

37:113 அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் இருக்கிறார். தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கிறார்.

37:114 திட்டவட்டமாக மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம்.

37:115 அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்.

37:116 இன்னும், அவர்களுக்கு உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆகிவிட்டார்கள்.

37:117 இன்னும், அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்.

37:118 இன்னும், அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.

37:119 இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்.

37:120 மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாகட்டும்.

37:121 நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.

37:122 நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள்.

37:123 நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர்.

37:124 அவர் தனது மக்களுக்கு, “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!

37:125 ‘பஅல்’ சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? மிக அழகிய படைப்பாளனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?

37:126 உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?