உமர் ஷரீஃப் — 426
33:55 அவர்கள் மீது (நபியின் மனைவிகள் மீது, முஃமினான பெண்கள் மீது) தங்கள் தந்தைமார்கள், தங்கள் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகள், தங்கள் (சமுதாயத்தைச் சேர்ந்த முஃமினான) பெண்கள், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் விஷயத்தில் (-அவர்கள் முன் பர்தா அணியாமல் இருப்பதில்) குற்றம் இல்லை. (பெண்களே!) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு பார்த்தவனாக இருக்கிறான்.
33:56 நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! இன்னும் ஸலாம் கூறுங்கள்!
33:57 நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் தொந்தரவு தருகிறார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும், இழிவுபடுத்துகிற தண்டனையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்.
33:58 எவர்கள் முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு தொந்தரவு தருவார்களோ அவர்கள் அபாண்டமான பழியையும் தெளிவான பாவத்தையும் திட்டமாக (தங்கள் மேல்) சுமந்து கொண்டார்கள்.
33:59 நபியே! உமது மனைவிமார்களுக்கும் உமது பெண் பிள்ளைகளுக்கும் முஃமின்களின் பெண்(பிள்ளை)களுக்கும் கூறுவீராக, அவர்கள் தங்கள் பர்தாக்களை தங்கள் மீது போர்த்திக்கொள்வார்கள்! இது அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்படுவதற்கு மிக சுலபமானதாகும். ஆகவே, அவர்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
33:60 நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் (விபச்சார ஆசை) உள்ளவர்களும் மதீனாவில் கெட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களும் (தங்கள் கெட்ட செயல்களிலிருந்து) விலகவில்லை என்றால் அவர்கள் மீது (உம்மை சாட்டிவிட்டு அவர்களை நீர் தண்டிக்க) உம்மை தூண்டிவிடுவோம். பிறகு, அவர்கள் அதில் உம்முடன் குறைவாகவே தவிர வசிக்க மாட்டார்கள்.
33:61 அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும். இன்னும், முற்றிலும் கொல்லப்படவேண்டும்.
33:62 இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் நடைமுறைதான் (இவர்கள் விஷயத்திலும்) பின்பற்றப்படும். அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் அறவே நீர் காணமாட்டீர்.