உமர் ஷரீஃப் — 396
28:85 நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) மீளுமிடத்திற்கு[1] திரும்பக் கொண்டு வருவான். (நபியே!) கூறுவீராக! “நேர்வழியைக் கொண்டு வந்தவரையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் என் இறைவன் மிக அறிந்தவன்.”
28:86 (நபியே!) இந்த வேதம் உமக்கு இறக்கப்படுவதை நீர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்றாலும் உமது இறைவனின் கருணையினால்தான் (உமக்கு இது இறக்கப்பட்டது). ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக அறவே நீர் ஆகிவிடாதீர்.
28:87 அல்லாஹ்வின் வசனங்களை (பின்பற்றுவதையும் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதையும்) விட்டு - அவை உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர் - அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள் உம்மை தடுத்து, கெட்ட பாதையின் பக்கம்) உம்மை திருப்பி விடவேண்டாம். உமது இறைவன் பக்கம் (உலக மக்களை எப்போதும்) அழைப்பீராக! இணைவைப்பவர்களில் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்.
28:88 அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைத்து விடாதீர்! (அவனையன்றி வேறு ஒன்றை வணங்கி விடாதீர்!) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஒரு இறைவன் இல்லவே இல்லை. எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவையே, அவனது முகத்தைத் தவிர. (முடிவான) தீர்ப்பு அவனுக்கே உரியது. இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
29:1 அலிஃப் லாம் மீம்.
29:2 “நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று அவர்கள் கூறுவதால் அவர்கள் சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள்?” என்று மக்கள் நினைத்துக் கொண்டனரா?
29:3 திட்டவட்டமாக நாம் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை சோதித்தோம். ஆக, அல்லாஹ் நிச்சயமாக உண்மையாளர்களையும் அறிவான். இன்னும், நிச்சயமாக பொய்யர்களையும் அவன் அறிவான்.
29:4 பாவங்களை செய்பவர்கள் நம்மிடமிருந்து தப்பித்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக் கெட்டதாக இருக்கிறது.
29:5 யார் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்பியவராக இருப்பாரோ நிச்சயமாக, அல்லாஹ்வின் (அந்த) தவணை வரக்கூடியதுதான் (என்பதை அவர் அறிந்து கொள்ளட்டும்). அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
29:6 யார் (தனது ஆன்மாவின் தீய ஆசைகளுக்கு எதிராகவும் அல்லாஹ்வின் எதிரிகளுக்கு எதிராகவும்) போரிடுவாரோ அவர் போரிடுவதெல்லாம் அவரது நன்மைக்காகவே. நிச்சயமாக, அல்லாஹ் அகிலத்தார்களை விட்டு முற்றிலும் தேவையற்றவன் ஆவான்.