>

உமர் ஷரீஃப் — 385

27:89 (லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற) நன்மையை யார் கொண்டு வருவாரோ அவருக்கு அதன் காரணமாக (சொர்க்கமாகிய) சிறந்தது (கூலியாக) உண்டு. இன்னும், அவர்கள் அந்நாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்.

27:90 இன்னும், யார் (இணைவைத்தல், பாவம் என்ற) தீமையை கொண்டுவருவாரோ அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்துகொண்டு இருந்ததற்கே தவிர கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று அவர்களிடம் கூறப்படும்.)

27:91 (நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம், இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். இன்னும், அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவையாகும். இன்னும், நான் (அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுகிற) முஸ்லிம்களில் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன்.

27:92 இன்னும், (இந்த) குர்ஆனை நான் (மக்களுக்கு முன்) ஓதுவதற்கும் (கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் (அந்த குர்ஆன் மூலம்) நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகிறானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”

27:93 இன்னும் (நபியே!) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிவீர்கள்.” இன்னும், (நபியே!) உமது இறைவன் (இணைவைப்பவர்களாகிய) நீங்கள் செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகிறார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும் உமக்கு வெற்றியும் உண்டு.)

28:1 தா சீம் மீம்.

28:2 (உமக்கு இறக்கப்படும் வசனங்களாகிய) இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.

28:3 நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்காக மூஸா இன்னும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையாக நாம் உமக்கு ஓதி காண்பிக்கிறோம்.

28:4 நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை அடக்கி ஆண்டு) பெருமையடித்(து வந்)தான். இன்னும், அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை (-இஸ்ரவேலர்களை) பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளை அவன் கொல்வான். இன்னும், அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிடுவான். நிச்சயமாக அவன் கெடுதி செய்வோரில் ஒருவனாக இருந்தான்.

28:5 இன்னும், பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை ஆட்சியாளர்களாக நாம் ஆக்குவதற்கும் (ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் பூமிக்கும் சொத்துகளுக்கும்) சொந்தக்காரர்களாக அவர்களை நாம் ஆக்குவதற்கும் நாடினோம்.