>

உமர் ஷரீஃப் — 303

18:84 நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்தோம். இன்னும், ஒவ்வொரு பொருளைப் பற்றி (-அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற) அறிவை அவருக்குக் கொடுத்தோம்.

18:85 ஆக, அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.

18:86 இறுதியாக, சூரியன் மறையும் இடத்தை (மேற்குத் திசையை) அவர் அடைந்தபோது (கரு நிற) சேறுகள் நிறைந்த கடலில் மறைவதாக அதைக் கண்டார். இன்னும், அதனிடத்தில் (ஒருவகையான) சில மக்களைக் கண்டார். “துல்கர்னைனே! ஒன்று, (இவர்களைத்) தண்டிப்பீர், அல்லது, அவர்களில் ஓர் அழகிய (நடத்)தை(யை) கடைப்பிடி(த்து அவர்களை மன்னி)ப்பீர். (இரண்டும் உமக்கு அனுமதிக்கப்பட்டதே!)” என்று கூறினோம்.

18:87 (துல் கர்னைன்) கூறினார்: ஆக, எவன் (இணைவைத்து வணங்கியும் என் கட்டளையை மீறியும்) அநியாயம் செய்தானோ அவனை தண்டிப்போம். பிறகு, அவன் தன் இறைவனிடம் மீண்டும் கொண்டு வரப்படுவான். அவன் கொடிய தண்டனையால் அவனை தண்டிப்பான்.

18:88 “ஆக, எவர் நம்பிக்கை கொண்டு, நற்செயலை செய்தாரோ அவருக்கு (இறைவனிடத்தில்) அழகிய சொர்க்கம் கூலியாக இருக்கிறது. இன்னும், நாம் நம் காரியத்தில் இலகுவானதை அவருக்கு விரைவில் கூறுவோம்.”

18:89 பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.

18:90 இறுதியாக, அவர் சூரியன் உதிக்குமிடத்தை (கிழக்குத் திசையை) அடைந்தபோது, ஒரு சமுதாயத்தின் மீது அது உதிப்பதாக அதைக் கண்டார். அதற்கு முன்னாலிருந்து (அதன் வெப்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றும் நிழல் தரும் மலை, மரம், வீடு போன்ற) ஒரு தடுப்பை அவர்களுக்கு நாம் ஆக்கி இருக்கவில்லை.

18:91 (அவர்களுடைய நிலைமை) அப்படித்தான் (இருந்தது). மேலும், திட்டமாக அதனிடத்தில் இருந்தவற்றை நாம் ஆழமாக சூழ்ந்தறிந்தோம்.

18:92 பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.

18:93 இறுதியாக, (அங்கிருந்த) இரு மலைகளுக்கு இடையில் (உள்ள ஓர் இடத்தை) அவர் அடைந்தபோது அவ்விரண்டிற்கும் முன்னால் (பிறருடைய) எந்த பேச்சையும் எளிதில் விளங்கமுடியாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்.

18:94 அவர்கள் (சைகையால்) கூறினார்கள்: “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்பவர்கள் எங்கள்) பூமியில் (நுழைந்து) விஷமம் செய்கிறார்கள். ஆகவே, எங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் ஒரு தடையை நீர் ஏற்படுத்துவதற்காக ஒரு தொகையை நாங்கள் உமக்கு ஏற்படுத்தி கொடுக்கட்டுமா?”

18:95 அவர் கூறினார்: “என் இறைவன் எதில் எனக்கு ஆற்றல் அளித்துள்ளானோ அதுவே (எனக்கு போதுமானதும்) மிக்க மேலானது(ம்) ஆகும். ஆகவே, (உங்கள் உழைப்பு எனும்) வலிமையைக்கொண்டு எனக்கு உதவுங்கள். உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் பலமான ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துவேன்.”

18:96 “(தேவையான) இரும்பு பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள். இறுதியாக, இரு மலைகளின் உச்சிகளுக்கு அவை சமமாகினால், (அதில் நெருப்பை மூட்ட) ஊதுங்கள்” என்று கூறினார். இறுதியாக, (நீங்கள் ஊதுவது) அவற்றை (பழுத்த) நெருப்பாக ஆக்கிவிட்டால் “என்னிடம் (செம்பைக்) கொண்டு வாருங்கள். (அந்த) செம்பை (உருக்கி) அதன் மீது நான் ஊற்றுவேன்” என்று கூறினார்.

18:97 “ஆக, அதன் மீது ஏறுவதற்கு அவர்களால் இயலவில்லை. இன்னும், அதைத் துளையிடவும் அவர்களால் இயலவில்லை.”