உமர் ஷரீஃப் — 275
16:73 இன்னும், இவர்கள் அல்லாஹ்வை அன்றி எவற்றை வணங்குகிறார்கள் என்றால் அவை இவர்களுக்கு வானங்கள் இன்னும் பூமியிலிருந்து எந்த ஒன்றையும் உணவளிக்க உரிமை பெற மாட்டார்கள். இன்னும், அவை (அதற்கு அறவே) ஆற்றல் பெற மாட்டார்கள்.
16:74 ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் உதாரணங்களை(யும் தன்மைகளையும்) விவரிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (தன் தன்மையை) அறிவான்; நீங்களோ (அவனது தன்மைகளை அவன் உங்களுக்கு அறிவித்தால் தவிர) அறிய மாட்டீர்கள்.
16:75 அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். பிறருக்குச் சொந்தமான, ஒன்றையும் (செய்ய) ஆற்றல் பெறாத அடிமை ஒருவர் இருக்கிறார். இன்னும் (வேறு) ஒருவர் இருக்கிறார். அவருக்கு நாம் நம் புறத்திலிருந்து அழகிய வாழ்வாதாரத்தை வழங்கினோம். ஆகவே அவர் அதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிகிறார். இ(ந்த இரு)வர்கள் சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
16:76 இன்னும், அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான்: இரு ஆடவர்கள் இருக்கிறார்கள். அவ்விருவரில் ஒருவர் ஊமை. அவர் எதையும் செய்ய சக்தி பெறமாட்டார். இன்னும், அவர் தன் எஜமானர் மீது சுமையாக இருக்கிறார். அவரை அவர் எங்கு (வேலைக்கு) அனுப்பினாலும் ஒரு நன்மையும் அவர் செய்யமாட்டார். இவரும், எவர் தானும் நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தை ஏவுகிறாரோ அவரும் சமமாவார்களா?
16:77 வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவை அல்லாஹ்வுக்கே சொந்தம். மறுமையின் காரியம், கண் பார்வை சிமிட்டுவதைப் போல்; அல்லது, (அதைவிட) மிக சமீபமானதாகவே தவிர இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
16:78 ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருக்கின்ற நிலையில் உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். இன்னும், உங்களுக்குச் செவிகளையும், பார்வைகளையும், உள்ளங்களையும் படைத்தான், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக!
16:79 வானத்தின் ஆகாயத்தில் (பறப்பதற்காகவும் மிதப்பதற்காகவும்) வசப்படுத்தப்பட்டவையாக (மிதக்கின்ற) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (வானத்தில்) அல்லாஹ்வைத் தவிர (எவரும்) தடுத்து வைக்கவில்லை. நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.