உமர் ஷரீஃப் — 273
16:55 நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு நன்றி மறுப்பதற்க்காகவே (இவ்வாறு இணைவைக்கிறார்கள்). ஆகவே, (இவ்வுலகில் கொஞ்சம்) சுகமனுபவியுங்கள். நீங்கள் (உங்கள் தீய முடிவை மறுமையில்) அறிவீர்கள்.
16:56 இன்னும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பாகத்தை (எதையும்) அறியாதவர்களுக்காக (-சிலைகளுக்காக) படைக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
16:57 இன்னும், அல்லாஹ்விற்குப் பெண் பிள்ளைகளையும் அவர்களுக்கோ அவர்கள் விரும்புவதையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவனோ (சந்ததிகளின் தேவையை விட்டு) மிகப் பரிசுத்தமானவன்.
16:58 மேலும், பெண் குழந்தையைக் கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவனோ துக்கப்பட்டவனாக அவனுடைய முகம் கறுத்ததாக ஆகிவிடுகிறது.
16:59 தனக்குக் கூறப்பட்ட நற்செய்தியின் தீமையினால், “கேவலத்துடன் அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைப்பதா?” என்று (பிற) மக்களை விட்டு (தனக்கு பிறந்த பெண் பிள்ளையை) மறைந்து கொள்கிறான். அறிந்து கொள்ளுங்கள்: அவர்களின் (இந்த) தீர்ப்பு மிகக் கெட்டதாகும்.
16:60 மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே கெட்ட தன்மை உள்ளது. அல்லாஹ்விற்கோ மிக உயர்ந்த தன்மை உண்டு. இன்னும், அவன் மிகைத்தவன், மகா ஞானவான்.
16:61 மேலும், மக்களை அவர்களுடைய குற்றத்தின் காரணமாக அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை அவர்களைப் பிற்படுத்துகிறான். ஆக, அவர்களுடைய (இறுதி) தவணை வந்தால் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
16:62 அவர்கள் வெறுப்பவற்றை அல்லாஹ்விற்கு ஆக்குகிறார்கள். இன்னும், நிச்சயமாக தங்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. கண்டிப்பாக நிச்சயம் இவர்களுக்கு நரகம்தான்; மேலும், நிச்சயம் இவர்கள் (நரகத்தில் உதவி செய்வோர் யாருமின்றி விட்டு) விடப்படுவார்கள்.
16:63 (நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னர் (பல) சமுதாயங்களுக்கு (நம்) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பினோம். ஆக, ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களை அலங்கரித்தான். ஆகவே, இன்று(ம்) அவர்களுக்கு அவனே நண்பன் ஆவான். இன்னும், (நரகத்தில்) துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
16:64 (நபியே!) இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காக; (மக்கள் எல்லோருக்கும்) நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு அருளாகவும் இருப்பதற்காகவே தவிர உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை.