உமர் ஷரீஃப் — 254
13:35 (அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது, அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அதன் உணவுகளும் அதன் நிழலும் (என்றுமே) நிலையானவை. இது (அல்லாஹ்வை) அஞ்சியவர்களின் அழகிய முடிவாகும். மேலும், நிராகரிப்பாளர்களின் முடிவோ நரகம்தான்!
13:36 (நபியே!) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்க(ளில் உம்மை நம்பிக்கை கொண்டவர்க)ள் உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு மகிழ்வார்கள். மேலும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை மறுப்பவர்களும் (உமக்கு எதிரான) பிரிவுகளில் உண்டு. (நபியே!) கூறுவீராக: “எனக்கு கட்டளையிடப்பட்டதெல்லாம் அல்லாஹ்வை நான் வணங்குவதற்கும் அவனுக்கு நான் இணைவைக்காமல் இருப்பதற்கும்தான்; அவன் பக்கமே நான் (உங்களை) அழைக்கிறேன்; இன்னும், அவன் பக்கமே என் திரும்புமிடம் இருக்கிறது.”
13:37 (நபியே!) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். இன்னும், உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவியாளரும் இருக்க மாட்டார், இன்னும் பாதுகாவலரும் இருக்க மாட்டார்.
13:38 மேலும், (நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பி இருக்கிறோம். இன்னும், அவர்களுக்கு மனைவிகளையும் சந்ததியையும் ஏற்படுத்தினோம். மேலும், அல்லாஹ்வின் அனுமதியினால் தவிர ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது எந்த தூதராலும் முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் (அது எழுதப்பட்ட) ஒரு நூல் இருக்கிறது.
13:39 (அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் அதை நிகழ்த்தி முடித்து) அழித்து விடுகிறான்; இன்னும், (அவன் நாடியதை தவணை வரும் வரை அதில்) தரிபடுத்தி வைக்கிறான். மேலும், அவனிடம்தான் விதியுனுடைய மூல நூல் இருக்கிறது.
13:40 (நபியே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது நமது நாட்டப்படியே நடந்தது); அல்லது, (அதற்கு முன்பே) நாம் உம்மை உயிர் கைப்பற்றிக் கொண்டால் (அதுவும் நமது நாட்டப்படியே நடந்ததாகும்). உம்மீது (சுமத்தப்பட்ட) கடமை எல்லாம் (இந்த மார்க்கத்தை எல்லோருக்கும்) எடுத்துரைப்பதுதான்! மேலும், விசாரணை செய்வதோ நம்மீது கடமையாக இருக்கிறது. (பாவிகளை நாம் நமது நாட்டப்படிதான் தண்டிப்போம். உமது விருப்பப்படியோ, அவர்களின் விருப்பப்படியோ இல்லை.)
13:41 நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் (தனது அடியார்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கிறான். அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் யாரும் அறவே இல்லை. மேலும், அவன் (முன்னோர், பின்னோரை) விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.
13:42 (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். ஆக, (நிறைவேறுகின்ற) சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியதாகும். (அவனது சூழ்ச்சிதான் நிறைவேறும்.) ஒவ்வோர் ஆன்மாவும் செய்வதை அவன் நன்கறிவான். மேலும், எவருக்கு மறுமையின் அழகிய முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் விரைவில் அறிவார்கள்.